ரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தேர்வு

ரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தெரிவாகியுள்ளார். மாநகருக்கான புதிய ஆட்சிச் சபையினை தீர்மானிக்கும் வாக்குப் பதிவுகள் நேற்று (திங்கய்கிழமை) ஆரம்பமாகியது.

இந்த தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் மேயர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற வாக்கு பதிவில் ஜோன் ரோறி 63 விகித வாக்குகளையும், ஜெனிபர் கீஸ்மட் 23 சதவிகித வாக்குகளையும் பெற்றனர்.

அந்தவகையில் ரொறன்ரோ நகரசபையின் மேயராக 2 ஆவது தடவையாகவும் தொடர்ந்தும் மக்கள் ஆதரவுடன் ஜோன் ரோறி வெற்றி பெற்றுள்ளார்.