தேசிய திட்டத்துடன் உடன்படாத மாகாணங்களுக்கான புறம்பான திட்டமொன்று இன்று அறிவிப்பு!

காலநிலை தொடர்பான தேசிய செயற்திட்டத்துடன் இணங்காத மாகாணங்களுக்கான, மத்திய அரசாங்கத்தின் புறம்பான திட்டம் பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிக்கவுள்ளார்.

பச்சைவீட்டு விளைவு வாயுக்களில் காபன் உள்ளடங்கிய வாயுக்களை சூழலில் வெளியிடும் செயற்பாட்டிற்கு வரியை செலுத்தும் இத்திட்டமானது, கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் காபன் வாயுக்களுக்கான வரியைச் செலுத்த சில மாகாணங்கள் மறுத்துள்ளன.

இது மாசுபடுத்தலுக்கான தண்டப்பணம் என கனடாவில் அழைக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த தண்டப்பணத்தைச் செலுத்த மறுத்த மாகாணங்களுக்கான பிரதியீட்டுத் திட்டத்தை இன்று வெளிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.