கனடாவின் வான்கூவர் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் பரிமாணத்தில் 6.6 மற்றும் 6.8 என பதிவாகியுள்ளது.

கனேடிய நேரப்படி இரவு 10.39 (1:39GMT) அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின் படி, ஒரே நேர் கோட்டுப்பாதையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாடி துறைமுகத்திலிருந்து 135 மைல்கள் தொலைவிலும் 8 மைல்கள் ஆழத்திலும் நிலநடுக்கம் நிலைகொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.