ரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது!

ரொறன்ரோ பகுதியில் உள்ள இணைய பாவனை மையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மதியம் 12:15 மணியளவில் 618 Bloor Street West பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடனத்திருந்தார்.

குறித்த இணைய பாவனை மையத்தில் இரண்டு ஆண்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

இதன் போது படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் சி.சி.டி.வி. காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 20 வயது முதல் 35 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.