பெண்ணொருவர் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது!

மத்திய ஆல்பர்ட்டா பகுதியில் 48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொது மக்களின் “அவசர உதவி” கேட்டார்.

இதற்க்கு முன்னர் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.