ரொறன்ரோவில் முற்கூட்டிய வாக்குப்பதிவுகள்: இந்த வருடம் வீழ்ச்சி!

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் குறித்த வாக்குப்பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் ஒக்டோபர் 10 முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை 51 இடங்களில் நடைபெற்ற முற்கூட்டிய வாக்குப்பதிவில் சுமார் 124,000 பேர் மட்டுமே வாக்களித்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இது கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட மிகவும் குறைவான வாக்குபதிவே இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்கூட்டியே வாக்களிப்பில் 2014 ஆம் ஆண்டியில், 160,000 வாக்காளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநகருக்கான புதிய ஆட்சிச் சபையினை தீர்மானிக்கும் இந்த தேர்தலின் இறுதி வாக்குப் பதிவுகள் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.