கனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு!

கனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளதை விசேட பொலிஸ் பிரிவினர் (RCMP) ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு பல மில்லியன் டொலர் பெறுமதியான கப்பல் கட்டும் திட்டம் பற்றிய இரகசிய தகவல்களை அந்நாட்டின் கடற்படையின் துணைத் தளபதி மார்க் நோர்மன், தனியார் நிறுவனங்களுக்கு வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.  கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டு விசேட பொலிஸ் பிரினரால் குற்றஞ்சாட்டப்பட்டு ஆவணங்களுடன் ஒட்டாவா நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கில் மார்க் நோர்மனின் (Mark Norman) வழக்கறிஞர், இக்குற்றத்தை மறுக்கும் ஆவணங்களையும் ஒட்டாவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் முதன்முதலாக கண்டறிந்து விசேட பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் வழங்கியவர் ஒரு சாதாரண அரசாங்க அலுவலகரான மெதிவ் மெச்சற் (Matthew Matchett) என்பவராவார்.