கனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்!

கனடாவின் தாராளவாதக்கட்சியின் நீண்டநாள் உறுப்பினரும் அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினருமான டொனால்ட் மெக்டொனால்ட் (Donald Stovel Macdonald) காலமானார்.


கனடாவின் றொரொன்டோ நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டொனால்ட் மெக்டொனால்ட் காலமானதாக அவருடைய குடும்பத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இறக்கும்போது அவருக்கு 86 வயதென அவருடைய மகள் சொன்ஜா மெக்டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் மெக்டொனால்ட், ஒரு சிறந்த கனேடியப் பிரஜை மட்டுமன்றி அவருடைய வாழ்நாளில் அதிகமான பகுதியை நாட்டின் நலனுக்காகவே செலவிட்டுள்ளதாக அவருடைய மகள் சோன்ஜா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஒட்டாவாவில் பிறந்த டொனால்ட் மெக்டொனால்ட், 1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அப்போதைய பிரதமர் பியரி ட்ரூடோவின் கீழமைக்கப்பட்ட அமைச்சரவையின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.