Brampton இல் நுட்பமான முறையில் ஏமாற்றப்பட்ட தமிழ் இளைஞன்!

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மோசடியால் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கனடாவின், ரொறன்டோ பகுதியில் iPad ஒன்றை கொள்வனவு செய்த இலங்கை இளைஞனுக்கு iPad பெட்டிக்குள் களிமண் கட்டியை வைத்து வழங்கி ஏமாற்றிய கடை ஒன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, அண்மையில் Brampton பகுதியில் Walmart என்ற கடையில் சசிதரன் நடராஜன் என்ற இளைஞன் 1000 டொலர்களை செலவிட்டு iPad Pro ஒன்றை கொள்வனவு செய்து, அதனை தனது தாயாருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, அவரது தாயார் பிறந்த நாள் அன்று காலை தனது மகனுக்கு முன்னால் பரிசுப் பெட்டியை திறந்து பார்த்தபோது, iPad க்கு சமமான நிறையில் களிமண் துண்டு ஒன்று iPad பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக நடராஜன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் களி மண்ணை பார்த்த பின்னர், களி மண்ணுக்கு கீழ் ஏதாவது இருக்கும் என நினைத்தேன். எனினும் அங்கு ஒன்றுமே இல்லை. சாஜர் கூட அதில் இல்லை  என்று குறிப்பிட்டார்.

மேலும் பிளாஸ்டிக் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில், iPad ஐ கொண்டு வந்ததாகவும், தாயின் பிறந்த நாளுக்கு பின்னர் அதனை திருப்பி கடையிலேயே கொடுத்ததோடு, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த கடை உரிமையாளர் அவருக்கு பணத்தை அல்லது புதிய iPad ஒன்றை திருப்பி தரவில்லை எனத் தெரிவித்த நடராஜான், “தங்கள் நிறுவனம் அவ்வாறு செய்யாது, கடைக்கு வருபவர்களுக்கு சிறந்தததையே கொடுப்போம் என கடை உரிமையாளர் தெரிவித்தாக கூறினார்.

எனினும் ஒரு வழியாக போராடி தனது பணத்தை மீளபெற்ற நடராஜன் அந்த பணத்தில் மீண்டும் ஐ போன் நிறுவனத்திடம் iPad கொள்வனவு செய்து தனது தாய்க்கு பரிசிளிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.