கனடாவில் கஞ்சாவுக்கு சட்ட அங்கீகாரம்: இவ்வாரம் அமுல்!

மருத்துவ தேவைகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக கஞ்சா செடிகளை வளர்க்கும் நடைமுறை கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சட்டம் இவ்வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.


கடந்த 2013ஆம் ஆண்டு உருகுவேயில் கையாளப்பட்ட இத்திட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, கனடாவும் இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் கனடாவில் கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கான சட்டம் அமுலில் வரவுள்ளது.

மருத்துவ தேவைகளை மேம்படுத்தவும், போதைப்பொருள் சம்பந்தமான குற்றங்களை தடுக்கவும் இச்சட்டம் உதவுமென இச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், நீண்ட நாள் பாவனையானது மக்களின் சுகாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமென இச்சட்டத்திற்கு எதிரானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கஞ்சாவிற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கும் முதல் ஜீ-7 நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.