இரசாயன பதார்த்தத்தை தவறுதலாக அருந்திய குழந்தை – விமான நிலையத்தில் சம்பவம்!

சிறுமி ஒருவர் சுத்திகரிப்பு இரசாயன பதார்த்தத்தை தவறுதலாக அருந்திய சம்பவம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.


விமான நிலையத்தில் சுத்திகரிப்பாளர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த இரசாயனப் திரவம் அடங்கிய போத்தல், எதுவும் எழுதப்படாத நிலையில் தவறுதலாக கைவிடப்பட்டு காணப்பட்டது.

அதனை குழந்தை ஒன்று அருந்தியதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஒன்று அனைத்துலக பயணத்தினை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அங்கிருந்த கணணி ஒன்றின் அருகே அமர்ந்திருந்ததாகவும், அங்கிருந்த போத்தலை எடுத்து அதிலிருந்த திரவத்தை அருந்திய குழந்தை உடனடியாகவே வாந்தி எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொறன்ரோ விமான நிலையங்கள் அதிகார சபையின் பேச்சாளர், பயணிகளின் நலனை தாம் மிக மிக கவனமான விடயமாக நோக்குவதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு போதிய ஒத்துளைப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.