‘மீ டூ’ MeToo பாலியல் புகார் இயக்கத்திற்கு கனேடிய பெண்கள் ஆதரவு!

பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும், தெரியப்படுத்திவரும் சமூகவலைதளங்களில் உள்ள ‘மீ டூ’ #metoo பாலியல் புகார் இயக்கத்திற்கு, கனேடிய பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


ஹேஷ்டேக் ‘மீ டூ’ பாலியல் புகார் இயக்கம் குறித்து சமூக வலைத்தளத்தில் 14 முதல் 24 வயதிற்குட்பட்ட கனேடிய 1000 இளம் பெண்களிடம் எடுக்கப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில், 28 சதவீதம் பேர் ஒட்டு மொத்த ஆதரவும், 40 சதவீதம் பேர் ஓரளவு நம்பகமானவர்களாக இருப்பதாக தெரிவித்தனர். மீதமுள்ள 11 சதவீதம் பேர் மட்டுமே இதற்கு மாற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கனேடிய ஒட்டுமொத்த பெண்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், 60 சதவீதம் கனேடிய இளம் பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் 25 சதவீத கனேடிய இளம் பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறித்த ‘மீ டூ’ பாலியல் புகார் இயக்கம், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்களான லசித் மாலிங்க, அர்ஜுன ரணதுங்க, மற்றும் பிரபல கவிஞர் வைரமுத்து ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#metoo