பீல் பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி ஓய்வு!

பீல் பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனீபர் இவாண்ஸ், பதவியிருந்து ஓய்வுப் பெறபோவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 35 வருடங்களாக தனது சேவையை நாட்டுக்கு வழங்கிய ஜெனீபர் இவாண்ஸ் கடந்த 6 வருடங்களாக பீல் பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரியாக பணியாற்றுகின்றார். எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் நாட்டுக்கு வழங்கிய சேவையை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும், இதுவே ஓய்வு பெறுவதற்கான சிறந்த தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜெனீபர் இவாண்ஸின் சேவையை பாராட்டி பல அரசியல் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.