இறைச்சிக்காக வைத்திருந்த நாய்களை தத்தெடுக்கும் கனடா!

தென்கொரியாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் நாய் பண்ணையிலிருந்து, 71 நாய்கள் மொன்றியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


கொண்டு வரப்பட்ட நாய்கள், கோட்-டெஸ்-நெய்ஸ்ஸில் உள்ள அவசர நாய் தங்குமிடத்தில், கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது குறித்த நாய்கள் சிறந்த கவனிப்பை பெற்று வருவதாகவும், விரைவில் தத்தெடுப்புக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தென்கொரியாவிலிருந்து 200 நாய்கள் கொண்டு வரப்பட்டு, ஓட்டாவாவில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டுள வருகின்றது.

இந்த நாய்களை அங்கிருந்து கனடாவிற்கு கொண்டு வர, தொலைக்காட்சியின் தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து 4200 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

நாய்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கு உலக நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில், கனடா முன்னெடுத்த இத்திட்டமானது உலக நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.