மூன்று வயது சிறுவனின் உயிரிழப்பு: 8 மாதங்களின் பின்னர் தாய் மீது குற்றச்சாட்டு!

கடந்த வருடம் கிராண்ட் ஆற்றில் மூழ்கிய மூன்று வயது சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் அவரது தாயார் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி குறித்த பெண் ஓட்டிச்சென்ற வாகனம் கிராண்ட் ஆற்றில் வீழ்ந்தது.

இந்நிலையில் 35 வயதுடைய மைக்கேல் ஹான்சன் என்ற பெண்ணின் மூன்று வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

இதன் பின்னர் குறித்த சிறுவனின் உடலை மீன்பிடியாளர்கள் அந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கண்டெடுத்தனர்.

தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் 8 மாதங்களின் பின்னர், தாய் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றில் முன்னிலையாவதாக அவர் உறுதியளித்த நிலையில், எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.