ரொறன்ரோ இளைஞர்களை இலக்காகக் கொண்ட ‘கஞ்சா’ கல்வி திட்டங்களுக்கு 4.1 மில்லியன்!

ரொறன்ரோ இளைஞர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா தொடர்பில் மூன்று பொதுக் கல்வி பிரசாரங்களுக்காக 4.1 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் ஜோன் ஓலிவர் நேற்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.

மேலும் இதன் போது கஞ்சாவினால் ஏற்படும் ஆரோக்கியமான விளைவுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து பற்றி இளைஞர்கள் தெரிந்துகொள்வதற்கு இந்த திட்டம் அவசியமாக அமையும் எனவும் கூறினார்.

அத்துடன் ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கஞ்சா ஒன்லைன்னில் விற்பனை செய்யப்படும் என்றும், பின்னர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் சிறு வியாபார நிலையங்களில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.