Kitchener பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், அச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 6 வாரங்களின் பின்னர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 58 வயதுடைய உடோ ஹான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றபோது 58 வயதுடைய அவரது மனைவி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.