வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் புகைப்படம் வெளியிடப்பட்டது!

விட்னி லேக்ஸ் மாகாண பூங்காவிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த வீட்டை உடைத்து நுழைந்த இருவரும், அங்கிருந்த 2 மடிக்கணினிகள் மற்றும் ஒரு சுற்றுநிருபத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் கண்காணிப்பு கமரா மூலம் சந்தேகநபர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸாரின் அவசர பிரிவுக்கு (780-675-5122) அழைப்பினை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.