ரொறன்ரோ மேயர் தேர்தல்: ஒரே நாள் பிரசார நடவடிக்கையில் முன்னணி வேட்பாளர்கள்!

ரொறன்ரோ மேயர் வேட்பாளருக்கான தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

அந்தவகையில் கிழக்கு யோர்க்கிலுள்ள ஜவானி பேக்கர்ஸ் உணவகமொன்றில் ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி காலை 9 மணிக்கு தனது பிரசார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.

அதேவேளை, முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் பழைய நகர மண்டபத்தில் 9:30 மணியளவில் பிரசார நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் கடந்த மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, டோரிக்கு மேயர் போட்டியில் முன்னிலையில் இருப்பதாகக் கருத்து தெரிவித்ததோடு, 56 சதவீத வாக்குப்பதிவு டோரிக்கும், 28 சதவீத ஆதரவு ஜெனிபர் கீஸ்மட்க்கும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.