பெண் ஒருவரிடம் கத்தி முனையில் கொள்ளை: பதின்ம வயது சந்தேகநபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!

Forest Hill பகுதியில் பெண் ஒருவரிடம் கத்தி முனையில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எக்கிள்டன் அவென்யூ மற்றும் பாத்ரூஸ்ட் தெரு பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு இரவு 9.30 மணியளவில் வருகை தந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர்.

அந்தவகையில் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பன்ம வயதுடையவர்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.