ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

ஸ்காபரோவில் நேற்றுப் பட்டப் பகல் வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


Birchmount வீதி மற்றும் Bonis Avenue பகுதியில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 1.30 அளவில், Tam O’Shanter குடியிருப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நபர் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்த நபரை அணுகிய ஆயுததாரி ஒருவர், துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ஏறக்குறைய 18 வயதுடைய இளைஞர் எனவும், அவரது உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி தாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், இறுதியாக அவர் Birchmount வீதியில் தெற்கு நோக்கிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.