Oshawa பகுதியில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Oshawa பகுதியில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 20 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டவுன்டன் மற்றும் தோர்ன்டன் சாலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதில் படுகாயமுற்ற நபர் வைத்தியசாலையிக்கு விரைந்து கொண்டுசெல்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மற்ற வாகனத்தின் சாரதியும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும் சிகிச்சைகள் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்ய டர்ஹாம் பிராந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.