யோர்க் பல்கலைக்கழக ஹைட்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

யோர்க் பல்கலைக்கழக ஹைட்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கீல் ஸ்ட்ரீட் மற்றும் கனார்ட்டிக் டிரைவ் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9:30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

இதன் போது சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தவேளை ஆண் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் காணப்பட்டதாகவும், அவரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் குறித்த நபர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த விசாரணை தொடர்பாக எந்தவொரு தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் இது, 2018 ஆண்டில் நகரத்தில் இடம்பெற்ற 82 வது கொலை என தெரிவித்துள்ளனர்.