இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு எமனாகும் கஞ்சா: கனேடிய ஆய்வு

கஞ்சா புகைப்பது, மதுஅருந்துவதைவிட இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு பெரும்தீங்கு விளைவிக்கக் கூடியதென மொன்றியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சிந்தனை திறன், ஞாபகசக்தி மற்றும் நடத்தைமீது இளவயது மதுபாவனை செலுத்தும் தாக்கத்தைவிடவும் கஞ்சா அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

மதுஅருந்துதல் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞர்களின் கவனம்செலுத்தும் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் கற்றல் செயல்திறன் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது.

ஆனாலும் கஞ்சாபுகைத்தல், மதுஅருந்துவதைவிட அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இதன் பாதிப்பு நீண்ட காலத்துக்கு தொடர்வதாகவும் இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

கஞ்சா பாவனை இளம்பருவத்தினரிடையே உளநோய் விருத்திக்கும் காரணமாக அமைந்துள்ளதாக ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதுடன் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்தில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கஞ்சா என்பது குறிப்பிடத்தக்கது.