55 வருடங்களில் முதன்முறையாக நோபல் பரிசை வென்றார் கனடா பெண்மணி!

55 வருடங்களில் முதன்முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறும் பெண்மணி என்ற சிறப்பை கனடாவை சேர்ந்த டோனா ஸ்டிரிக்லாண்ட் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் 1903ஆம் ஆண்டு மேரி க்யூரியும், 1963ஆம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் 1963ஆம் ஆண்டும் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்ற பெண்கள் ஆவர்.

ஸ்டிர்க்லாண்ட் அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின் மற்றும் ஃபிரான்ஸை சேர்ந்த ஜெரால்ட் மொரூவுடன் இந்த பரிசை பகிர்ந்து கொள்கிறார்.

சீரொளி இயற்பியல் (laser physics) துறையில் இவர்கள் ஆற்றிய பணிக்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி ஆஷ்கின் ‘ஆப்டிக்கல் டிவீசர்ஸ் (optical tweezers)’ எனப்படும் ஒருவகை லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அது உயிரியல் அமைப்பை அறிந்துகொள்ள உதவுகிறமை குறிப்பிடத்தக்கது.