கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம். நேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது. முகநூல் வாயிலாகவும்,Read More →

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை டிசெம்பர் 1 ல் கலைகிறது : புதிய தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்! தலைமைத் தேர்தல் ஆணையாளராக கனடா ரொரென்ரோவில் வாழும் திரு பொன் பாலராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.Read More →

கஞ்சா பயன்பாடும் விற்பனையும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில் கனடாவுக்கும் பயணிக்கும் தமது நாட்டு மக்களுக்கு சில நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சீன அரசாங்கம் இது தொடர்பில் தனது நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், கனடா செல்லும் தமது நாட்டு மக்கள் அங்கு கஞசா புகைப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ரொரன்ரோவில் உள்ள சீனத் தூதரகம் தனது இணையத்தளம் ஊடாக விடுத்துள்ள அறிவுறுத்தலில், தத்தமது உடல் உள ஆரோக்கியத்தைRead More →

Bombardier நிறுவனமானது Metrolinx மேற்கொண்ட உடன்படிக்கையின் படி 76 LRT ரக பயணிகள் ஊர்தியை வழங்க உள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், பணிகள் முடிந்த பின்னர் ரொறன்ரோ மக்கள் புது விதமான LRT ரக பயணிகள் ஊர்தியை  பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று Bombardier நிறுவனம் Metrolinx வசம் கையளிக்க உள்ள LRT ரக ஊர்தியை ஊடகங்கள் முன்னிலையில் காட்சி படுத்தியது. கிழக்கு-மேற்கு பாதை ஊடகRead More →

கனடா – அமெரிக்க எல்லையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் சகோதர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் Nova Scotia வைச் சேந்த இருவர், Woodstock, N.B. மற்றும் Houlton, Maine பகுதிகளுக்கிடையே அவர்கள் பயணித்த காரை நிறுத்தினர். கனடா அமெரிக்க எல்லைக்கு நடுவே காரை நிறுத்திய அவர்களிடம் எல்லை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டபோது அவர்கள் பேச மறுத்தனர். இதனால் எல்லையில் சிறிது நேரம்Read More →

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை அடுத்து, ரொறன்ரோ பெரும்பாகத்திலும் உள்ள மத வழிபாட்டு தலங்களில் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை அங்குளள யூத வழிபாட்டு தலமொன்றில் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இறுதியாக வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அங்கு 11 பேர்Read More →

மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தக முரண்பாடுகளை குறைப்பதற்கு இணைந்து செயற்பட தயாராகவிருப்பதாக சஸ்கச்சுவான் மற்றும் ஒன்ராறியோ பிரதமர்கள் உறுதியளித்துள்ளனர். ரொறன்ரோவில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த இருவரும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தவும், பொருளாதார ரீதியான போட்டித் தன்மைகளுகளுக்கான குறுக்கீடுகளை குறைப்பது தொடர்பாகவும்Read More →

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் நகரிலுள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குடியிருப்பு கட்டடத்தின் பத்தாவது மாடியிலுள்ள வீடொன்றில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இத்தீவிபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் குறித்த முதியவர் சிக்கிக் கொண்டிருந்ததை அவதானித்த தீயணைப்பு வீரர்கள், மிகவும் ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.Read More →

அமெரிக்காவின் ஆடை மீண்டும் கனடிய சந்தைக்கு நாளை மறுதினத்திலிருந்து (வியாழக்கிழமை) மீண்டும் பிரவேசிக்கள்ளது. குறித்த ஆடை நிறுவனமானது, இணைய விற்பனை மூலம் மாத்திரமே தற்போது வர்த்தக செயற்பாட்டை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிமுறிவிற்கு உட்பட்டு பல நட்டங்களை அடைந்த ஆடை நிறுவனம் கனடாவில் மீண்டும் பிரவேசிக்கின்ற போதிலும், ஒரு வர்த்தக நிலையத்தைக் கூட நிறுவவில்லையென குறித்த நிறுவனத்தின் சந்தை அமைப்பாளர் சபீனா வெபர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஏற்கனவே ஒரு முறை நட்டத்தைRead More →

கனடாவில் அதிகரித்துவரும் வங்கிக்கடன் வட்டி காரணமாக,  கடன்பட்டோர்கள் மிகவும் மனக்கவலையில் உள்ளனர். கடந்த ஒரு தசாப்த காலமாக சொந்த வீடுகளையுடைய கனடிய மக்கள் மிகவும் குறைந்த வட்டிகளைக் கொண்ட கடன்களைப் பெற்று மகிழ்ச்சியாகவும் இலாபகரமாகவும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர். படிப்படியாக அதிகரித்துக் கொண்டுவந்த வங்கிக் கடனுக்கான வட்டித் தொகையானது கடந்த வாரத்திலிருந்து பாரிய அளவு அதிகரிப்பைக் கண்டுள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் காணப்பட்ட வட்டிக்கு தற்போதையRead More →