விச்சேர்ச் – ஸ்டாப்வில் பகுதியில் உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதை செலுத்திய விமானி உயிரிழந்துள்ளார் என யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வனப்பகுதிக்கு அருகில் வார்டன் அவென்யூ மற்றும் அரோரா வீதி அருகே இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் அவசர பிரிவிக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற போது விமானி உலங்குவானூர்தியின் ஒரு பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்டார். தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால்Read More →

அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் இன்று (திங்கட்கிழமை) நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இதன்போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிநேகபூர்வ சந்திப்பாக இச்சந்திப்புRead More →

தன்னாட்சி சுதந்திரம் கோரும் கற்றலோனியா விவகாரத்தில் தீர்வு காணும் ஆற்றல் ஸ்பெயின் அரசாங்கத்திற்கும் அந்த நாட்டு மக்களும் இருக்கின்றதென தாம் நம்புவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். மொன்றியலில் நேற்று முன்தினம் ஸ்பெயின் பிரதமருடனான சந்திப்பை அடுத்து இடம்பெற்ற நிலைக்கவில்லை கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இரண்டு நாடுகளின் தலைவர்களும் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்திய போது, வடகிழக்கு மாநில ஸ்பானியர்களின் தன்னாட்சி உரிமைRead More →

ரொறொன்ரோவில் 130க்கும் அதிகமான துப்பாக்கிகள் கைப்பற்றப்படடு்ளளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் செளன்டர்ஸ் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆயுதங்களை ஒழிக்கும் வகையில் கடந்த எட்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த சிறப்பு நடவடிக்கைகளின் போதே இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். துப்பாக்கிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் மட்டும் 247 பேரைக் கைது செய்துள்ளதாகவும், 136 துப்பாக்கிகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.Read More →

ரொறொன்ரோ மேயர் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்காக நேரடி பிரசார நடவடிக்கையில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி மற்றும் முன்னாள நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் இந்த நேரடி நேரடி பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்களுடன் மேயர் பதவிக்கு போட்டியிடுவோரில், சரோன் கெப்பிரசெலாசி, கெளதம் நாத், சாரா கிளைமென்ஹாகா ஆகியோரும் இநத் நேரடி விவாதத்தில் கலந்துRead More →

வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில் குறித்த உடன்பாடு தொடர்பான அடுத்த பேச்சுக்கான கால எல்லையினைத் தவறவிட்டுவிட வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பல கால எல்லைகள் தவறவிடப்பட்டுள்ள நிலையில் பேச்சுக்கள் இன்னமும் தொடர்வது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் ஹெவின் ஹசெட் கருத்துத் வெளியிடுகையில், கனடாவுடனான இந்த பேச்சுக்கள் எதற்காக இன்னமும் முடிவுக்கு வரவிலலை என்பதுRead More →

பேர்ளிங்டன் பகுதியில் பொலிஸாருடன் தொடர்புபட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 32 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயீன் எலிசபெத் நெடுஞ்சாலைக்கு தெற்கே, Appleby Line மற்றும் Harvester வீதிப் பகுதியில், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்த Esso எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தாம் அழைக்கப்பட்டதாகவும், அங்கு சென்ற போது, குறைந்ததுRead More →

ஒன்ராறியோவில் மாநிலம் தழுவிய கல்வி முறையில் ஏற்படுத்தப்படும் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர். அண்மையில் லிபரல் அரசாங்கத்தினால் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு சீர்திருத்தப்பட்ட பாலியல் கல்வி முறையினை இல்லாது செய்து, ஏற்கனவே இருந்த 1998ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கல்வி முறையினை மீண்டும் கொண்டு வருவதற்கு டக் ஃபோர்ட் தலைமையிலான தற்போதைய ஒன்ராறியோ மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், டக் ஃபோர்ட் தலைமையிலானRead More →

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நேற்று (வியாழக்கிழமை) நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை, இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மூன்று பிரதேசRead More →

ரொறன்ரோ மற்றும் ஹமில்டனில் உள்ளிட்ட பகுதிகளுக்கு GO Transit சேவையை விரிவுபடுத்த ஒன்றாறியோ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் குறித்த திட்டத்தை எதிர்வரும் வாரத்தில் இருந்து அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் ரொறன்ரோவில் இருந்து லாக்சோர் வரையான போக்குவரத்து 18 விகிதமாக அதிகரிக்கப்பட்டு, அடுத்த வாரம் முதல் ஒரு வாரத்திற்கு 220 சேவைகளை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பலர் நன்மையடைவார்கள்Read More →