தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 2019 வரை மீளக்குடியமர முடியாது: நிர்வாகம்

ரொறொன்ரோவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை அடுத்து வெளியேற்றப்பட்ட 1500 குடும்பங்களும் அடுத்த ஆண்டளவில் மீண்டும் மீள்குடியமர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தெரு பகுதியில் உள்ள குறித்த குடியிருப்பு கட்டடத் தொகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி மேற்படி விபத்து சம்பவித்திருந்தது.

அதனை தொடர்ந்து குறித்த குடியிருப்பில் வசித்துவந்த சுமார் 1500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீ அனர்த்தம் ஏற்பட்ட குடியிருப்பு கட்டடத்தின் கட்டுமானம் மற்றும் மின்சார கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள் குடியிருப்பளர்கள் அங்கு குடியேறுவதற்கு தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த குடியிருப்பின் சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அடுத்த 2019ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அங்கு குடியிருப்பாளர்கள் அங்கு வந்து குடியமர முடியும் எனவும் அந்த கட்டடத்தின் நிர்வாகி அறிவித்துள்ளார்.