குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னரே 3 மாதங்கள் விடுமுறை – அரசாங்கம்

கனடாவில் குழந்தை பிரசவத்திற்கு முன்பாக மூன்று மாதங்கள் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தினால் மேலதிகமாக 24,000 பெற்றோர்கள் நன்மை பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய குடும்பங்கள், பிள்ளைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் Jean-Yves Duclos, நேற்று முன்தினம் (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.

இதற்க்கு முன்னர் பெண்களுக்கு குழந்தையை பெற்றுக்கொண்ட பின்னரேயே விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின் படி குழந்தை பெற்றுக்கொள்வதற்கு 3 மாதங்கள் முன்னரும் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாய் மட்டுமன்றி தந்தையர்களும் நமையடைவார்கள் என அவர் கூறியுள்ளார். அத்துடன் 2019 மார்ச் முதல் இந்த நன்மை கிடைக்க கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையர்களுக்கு சமமான பொறுப்புக்களை  ஊக்குவிக்கும் நோக்கத்துடன் லிபரல் அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறை படுத்துகின்றது.

இன்று வரை 85 சதவிகித தாய் விடுமுறையை பெறுவதால் பணிகளிலிருந்து நீண்ட விடுமுறை பெறுகின்றனரெனவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் கியுபெக் மாகாணத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. கனடா பூராகவும் இதன் வெற்றி பிரதிபலிக்கும் என ஒட்டாவா நம்புகின்றது.

எனவே தான் ஆண்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் கூறினார்.