குளிர்காலத்தில் சாலையில் கால்சியம் குளோரைடுகளை பயன்படுத்த நடவடிக்கை!

குளிர் காலநிலை காரணமாக எட்மன்டன் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் இருக்கும் பனிக்கட்டிகளை நீக்க கல்சியம் குளோரைட் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதில் நிலவும் குளிர் காலநிலை நிலை காரணமாக அதன் வீதிகள்,பாலங்களில் பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அதனை அகற்றுவதற்கான ஒரு முயற்சியாகவே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக நகரசபை தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம், இந்த திட்டத்தின் மூலம், இந்த குளிர்காலத்தில் கல்சியம் குளோரைடு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்கவும், அதற்கான தகவல்களை சேகரிக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஒரு சிறப்பு குழுவும் அமைக்கப்படுவதாக நகரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதனூடாக எதிர்வரும் 2019-2020 குளிர்காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் இத் திட்டத்தை விரிவாக்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இதற்கான 4 மில்லியன் கனேடிய டொலர்களை அடுத்த 2019-2022 ற்கான வரவு செலவு திட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.