ஃப்ரீலண்ட் மிகுந்த மதிப்பிற்குரியவர்: அமெரிக்க தூதுவர்

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் மீது தான் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளதாக, கனடாவிற்கான அமெரிக்க தூதுவர் கெலி க்ராஃப்ட் தெரிவித்துள்ளார்.


நஃப்டா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் கிறிஸ்டியா ஃப்ரீலண்டின் பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்த நிலையிலேயே கெலி க்ராஃப்டின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

மேலும் தெரிவித்த அவர், ”ஃப்ரீலண்ட் தனிப்பட்ட ரீதியில் உண்மையில் மிகவும் உதவி செய்யும் நபர். பேச்சுவார்த்தைகளின் போதான ப்ரீலண்டின் நன்னடத்தை அமெரிக்க தரப்பினரால் வெகுவாக பாராட்டப்பட்டது” எனவும் குறிப்பிட்டார்.

கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் பேச்சுவார்த்தை முறை குறித்து நாம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும், நாம் அவர்களது பிரதிநிதித்துவத்தை விரும்பவில்லை எனவும் ட்ரம்ப் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.