வெனிசுவேலா மீது சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கனடா வலியுறுத்து!

வெனிசுவேலா மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று கனடா மற்றும் சில லத்தின் அமெரிக்க நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.


மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு தனது அழுத்தத்தை பிரயோகிப்பது தொடர்பாக வெனிசுவேலா அரசாங்கம் மீது குறித்த நாடுகள் நேற்றைய தினம் (புதன்கிழமை) தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.

நெதர்லாந்தின் ஹேக் நகரை தளமாக கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் சக அங்கத்துவ நாடொன்றுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் முதல் தடவையாக இதுவாகும்

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெரு, ஆஜன்டீனா, சிலி, கொலம்பியா, மற்றும் பராகுவே நாடுகளின் ஜனாதிபதிகளும், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவும் கைச்சாத்திட்ட மனு சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.