79 வயதுடைய முதியவர் ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு வாகனத்துடன் தப்பிச்ச சென்ற சந்தேகநபரை ரொறொன்ரோ பொலிஸார் தேடிவருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு கிழக்கு ஷெப்பார்ட் அவென்யூ மற்றும் பிர்ச்மவுன் வீதியில் உள்ள அன்கன்கோர்ட் மோல்ற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், படுகாயமுற்று உயிருக்கு அப்பத்தான நிலையில் இருந்த முதியவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இருப்பினும் விபத்தை ஏற்படுத்தியவர் தப்பி சென்ற நிலையில், குறித்த நபரை தேடி மேலதிக விசாரணைகளை ரொறொன்ரோ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.