விச்சேர்ச் – ஸ்டாப்வில் பகுதியில் உலங்குவானூர்தி விபத்து: விமானி சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

விச்சேர்ச் – ஸ்டாப்வில் பகுதியில் உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதை செலுத்திய விமானி உயிரிழந்துள்ளார் என யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வனப்பகுதிக்கு அருகில் வார்டன் அவென்யூ மற்றும் அரோரா வீதி அருகே இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் அவசர பிரிவிக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற போது விமானி உலங்குவானூர்தியின் ஒரு பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்டார்.

தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் விமான நிலையதிற்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என Buttonville விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்தில் சிக்கிய உலங்கு வானூர்தியானது வட பேவின் அத்தியாவசிய உலங்குவானூர்திகளில் ஒன்று எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான பகுதி மூடப்பட்டு, விபத்து தொடர்பில் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.