எட்டோபிகோக் பகுதியில் உள்ள குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்!

எட்டோபிகோக் நகரின் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிட தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்ததாகவும், மற்றுமொருவர் சிறுகாயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரொறொன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற பொலிஸார் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய முதலாவது ஆண் நபர் மீது ஒரு துப்பாக்கிச் சூட்டுக்கு காயமும், 2 ஆவது நபர் மீது பல துப்பாக்கிச் சூட்டு காயங்களும் காணப்பட்டது.

மேலும் 3 ஆவதாக்க பாதிக்கப்பட்டவர் பெண் என்றும் அவர் 30 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை. எனினும் மேலதிக விசாரணைகளை ரொறொன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.