ரொறொன்ரோ மேயர் தேர்தல்: நேரடி பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள்!

ரொறொன்ரோ மேயர் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்காக நேரடி பிரசார நடவடிக்கையில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி மற்றும் முன்னாள நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் இந்த நேரடி நேரடி பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் மேயர் பதவிக்கு போட்டியிடுவோரில், சரோன் கெப்பிரசெலாசி, கெளதம் நாத், சாரா கிளைமென்ஹாகா ஆகியோரும் இநத் நேரடி விவாதத்தில் கலந்து கொள்வதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளனர்.

தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த நேரடி விவாத நிகழ்வு, நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

இன்றைய இந்த விவாதத்தில் ரொறொன்ரோ நகருக்கான கலை பண்பாட்டு விழுமியங்கள், சமத்துவம், வளர்ச்சி, வாழ்வதற்கு ஏதுவான சூழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படுகிறது.

டக் ஃபோர்ட் தலைமையிலான பதிய மாகாண அரசு, ரொறொன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்த நடவடிக்கைகளை மேறகொண்டு, அதன் எண்ணிக்கையை தற்போது 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டக் ஃபோர்ட்டின் இந்த உறுப்பினர் குறைப்புத் திட்டத்திற்கு, ஜோன் ரோறியும், ஜெனீஃபர் கீஸ்மட்டும் கடுமையான எதிர்பினை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.