ரொறொன்ரோவில் 250க்கும் மேற்பட்டோர் கைது – பொலிஸ் தலைமை அதிகாரி!

ரொறொன்ரோவில் 130க்கும் அதிகமான துப்பாக்கிகள் கைப்பற்றப்படடு்ளளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் செளன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்களை ஒழிக்கும் வகையில் கடந்த எட்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த சிறப்பு நடவடிக்கைகளின் போதே இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

துப்பாக்கிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் மட்டும் 247 பேரைக் கைது செய்துள்ளதாகவும், 136 துப்பாக்கிகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

இநத ஆண்டில் இதுவரை ரொறொன்ரோவில் மட்டும் 300க்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறே ரொறொன்ரோவில் இந்த ஆண்டில் இதுவரை 79 மனித கொலைகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் துப்பாக்கிச் சூட்டினால 40 கொலைகள் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.