தன்னாட்சி சுதந்திரம் கோரும் கற்றலோனியா விவகாரம்: தீர்வு மக்கள் கையில் என்கின்றார் ஜஸ்டின் ரூடோ

தன்னாட்சி சுதந்திரம் கோரும் கற்றலோனியா விவகாரத்தில் தீர்வு காணும் ஆற்றல் ஸ்பெயின் அரசாங்கத்திற்கும் அந்த நாட்டு மக்களும் இருக்கின்றதென தாம் நம்புவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

மொன்றியலில் நேற்று முன்தினம் ஸ்பெயின் பிரதமருடனான சந்திப்பை அடுத்து இடம்பெற்ற நிலைக்கவில்லை கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரண்டு நாடுகளின் தலைவர்களும் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்திய போது, வடகிழக்கு மாநில ஸ்பானியர்களின் தன்னாட்சி உரிமை வாக்கெடுப்பை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரூடோ, நிச்சயம் அதனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்த அந்த நாட்டின் உள்ளக விவகாரம் என்ற போதிலும், ஸ்பானிய மக்களும் அந்த நாடடில் உள்ள வெவ்வேறு அரசாங்கங்களும், கருத்துச் சுதந்திரத்தினையும், மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், அந்த நாட்டின் அரசியலமைப்பினையும் மதித்து நடப்பார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.