இலங்கை ஜனாதிபதிக்கும் கனேடிய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் இன்று (திங்கட்கிழமை) நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது.

இதன்போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிநேகபூர்வ சந்திப்பாக இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்ள வருகைதந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.