பேர்ளிங்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, இரு பொலிஸார் காயம்!

பேர்ளிங்டன் பகுதியில் பொலிஸாருடன் தொடர்புபட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இதில் 32 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குயீன் எலிசபெத் நெடுஞ்சாலைக்கு தெற்கே, Appleby Line மற்றும் Harvester வீதிப் பகுதியில், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்த Esso எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தாம் அழைக்கப்பட்டதாகவும், அங்கு சென்ற போது, குறைந்தது ஒரு சந்தேக நபர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் இருந்ததாகவும், இதன்போது ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த அந்த சந்தேக நபர் உயிரிழந்ததாகவும் ஹல்ட்டன் பிராந்திய பொலிஸார் தெரிவித்து்ளளனர்.

இதன்போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அதிகாரிகளும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் ணனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.