பலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை

தெற்கு ஒன்ராறியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதன் எதிரொலியாக கடுமையான சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கு ஒன்ராறியோவில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்றும் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் கனடா அமைப்பினால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட விசேட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் மற்றும் மாலை வேளையில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் செயற்படுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.