ஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது!

ஒன்றாரியோ பகுதியில் ஓடும் ரயிலின் மீது பயணம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றாரியோவின் Mississauga பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 19வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் கூரை மீது அமர்ந்தபடி பயணம் செய்யும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவியது.

இதனையடுத்து ரயில் நிர்வாகம் குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த காணொளியானது கடந்த 2017ஆம் ஆண்டு யூன் மாதம் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.

இந்த நிலையில் குறித்த காணொளியில் காணப்படும் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இளைஞரின் வயதை கருத்தில்கொண்டு அவரது பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் பொலிசார் வெளிவிட மறுத்துள்ளனர்.