கனேடிய தமிழ் ஊடகங்களின் ஆதரவு..! தனியொரு தமிழனாக போட்டியிடும் நிரன் ஜெயநேசனுக்கு..

ரொறன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை தெரிவு செய்ய மக்களிடையே கடும் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்க இருப்பதால், யாருக்கு வாக்களிப்பது என்று தமிழ் மக்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் வாக்குகள் சிதறடிக்கப்படலாம் என்ற அச்சமும் ஏற்ப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையை தவிர்க்கும் பொருட்டு கனேடிய தமிழ் ஊடகங்கள் ஒன்றிணைந்து முதலில், மார்க்கம் நகர சபையின் 7-ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து கடந்த 19-08-2018 அன்று ஆரோக்கியமான விவாதம் ஒன்றிணை நடத்தினர். இதில் 5 வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் மூன்று பேர் கலந்து கொண்டனர். கிள்ளி வளவன், மலர்விழி வரதராஜா, சோதி செல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த பிறகு கனேடிய தமிழ் ஊடகங்கள் இணைந்து கடந்த செப்டம்பர் 9 திகதி கனேடிய ஊடக திருவிழாவை நடத்தின. இதில் ஒன்ராறியோவில் பல அங்கத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் கலந்து கொண்டு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

கனடாவில் வலிமையான ஒரு தமிழ் சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தமிழ் ஊடகங்கள் இந்தனை முன்னெடுத்து சென்றது.அதற்கான தேடுதலில் தற்போது மார்க்கம் பகுதியில் Regional Councillor ஆக போட்டியிடும் நிரன் ஜெயநேசனை முன்னிறுத்துவது என்று ஊடகங்கள் முடிவு செய்துள்ளன.

இவரை கனேடிய தமிழ் மக்கள் மட்டும் அல்ல. இந்த உலகமே அறிந்திருக்கிறது. அரசியலில் களம் காணும் முன்னரே சமூக நல பணியால் உலகை உற்று நோக்க செய்தவர் நிரன் ஜெயநேசன். மேலும் ரொறன்ரோ காவல்துறையில் law enforcement அதிகாரியாகவும் பணியாற்றி வந்தவர்.

கடந்த வருடம் ரொறன்ரோவில் உள்ள வால்மார்ட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் ஜவுளிக் கடையில் ஆடை திருடினார்.அந்த இளைஞரைக் கடை நிர்வாகம் பிடித்துவைத்துக் கொண்டு போலீஸில் புகார் கொடுத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ்காரர்களில் ஒருவர் நிரன் ஜெயநேசன்.

இந்தக் கடையில் விலை உயர்ந்த பொருட்கள் இத்தனை இருந்தும், ஏன் அந்த இளைஞர் ஒரு சட்டை, சாக்ஸ், டை ஆகியவற்றை மட்டும் திருடியுள்ளார் என ஒரு நிமிடம் யோசனை செய்தார். பின்பு, இளைஞனைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தார்.அந்த இளைஞர், எனக்கு நேர்முகத்தேர்வு இருந்தது. அதில், நான் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆனால், நல்ல ஆடை வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. அதனால், ஆடையைத் திருடிவிட்டேன் என தெரிவித்துள்ளார். அதை கேட்டு மனம் இரங்கிய ஜெயநேசன் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யாமல், அவருக்குத் தேவையான சட்டை, சாக்ஸ், டை ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

“இந்த இளைஞன் வாழ்க்கையில் அதிகமான கஷ்டத்தை எதிர்கொண்டுவருகிறார். தன்னுடைய வேலை மூலம் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.அதனால், இளைஞர் தவறு செய்துவிட்டார். அவரைக் கைது செய்யவில்லை. ஒருவேளை அவரைக் கைது செய்தால், அவரது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். தற்போது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று வேலைக் கிடைத்துவிட்டால் அவரது வாழ்க்கை முற்றிலும் மாறும்” என ஜெயநேசன் கூறியுள்ளார்.

இப்படி பல சமூக பணிகளின் மூலமாக பலரின் வாழ்வுக்கு ஒளியேற்றியவர் ஜெயநேசன். தற்போது இவர் மார்க்கம் பகுதியில் Regional Councillorஆக போட்டியிட இருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது.

அரசியலுக்கு வந்து விட்டு பதவி ஆதாயத்திற்காக பொதுநலன் நோக்கி செல்வோர் மத்தியில், தனது வாழ்வையே பொதுநலனில் கழித்து விட்டு மக்கள் பணியாற்ற வந்திருக்கும் ஜெயநேசனுக்கு தங்கள் ஆதரவு உண்டு என மார்க்கம் தொகுதி வாழ் தமிழ் மக்கள் கூறியுள்ளார்.

Regional Councillor பதவிக்கு தனியொரு தமிழனாக போட்டியிடும் நிரன் ஜெயநேசக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வெற்றிக்கு பல கனேடிய தமிழ் ஊடகங்களும் தமது பெரும்பான்மையான ஆதரவினை தெரிவித்து வெற்றி பெற செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.