10 பேர் உயிரிழப்பு: சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

ரொறன்ரோவில் 10 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது நபர் மீது 10 கொலை குற்றச்சாட்டுக்களும், 16 பேரை கொலை செய்ய முயற்சி செய்தாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், பலர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.