ரொறன்ரோ பகுதியில் இருதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : இருவர் காயம்

ரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.


நேற்று (புதன்கிழமை) மதியம் முதல் து்பபாக்கிச் சூட்டுச் சம்பவம் மதியம் 12.10 மணியளவில் டன்ஃபோர்த் வீதியின் வடக்கே மிட்லாண் அவனியூவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பதின்ம வயது நபர் ஒருவரே சிறிய துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மதியம் 12.45 மணியளவில் Capri வீதி மற்றும் East Mall பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதிலும் பதின்ம வயதுடைய ஆண் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் எனினும் அவருக்கு உயிராபத்தான காயங்கள் இல்லை எனவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதில் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்தமைக்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பில் இரண்டு நபர்களைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, அந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற இரண்டு பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளில் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.