புதிய றோயல் ஆல்பர்ட்டா பொருட்காட்சி சாலை ஒக்டோபர் 3 இல் திறப்பு!

புதிய றோயல் ஆல்பர்ட்டா பொருட்காட்சி சாலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படும் என கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் ரிகார்டோ மிராண்டா தெரிவித்துள்ளார்.

குறித்த பொருட்காட்சி சாலை அமைப்பு பற்றி கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 2013 ஆம் ஆண்டு முதல் அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016 இல் முடிவடைந்தது.

இதற்காக 253 மில்லியன் டொலர்களை ஆல்பர்ட்டா அரசாங்கமும் 122.5 மில்லியன் டொலர் மத்திய அசரங்கத்தின் நிதியையும் சேர்ந்தது மொத்தமாக 375.5 மில்லியன் டொலர் செயலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் பரப்பு 419,000 சதுர அடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மனித வரலாறு, இயற்கை வரலாறு உட்பட சிறுவர்களுக்கான புகைப்படங்கள் மற்றும் மக்களுக்கு பழக்கப்பட்ட சில அரியவகை பூச்சி வகைகளும் இங்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பொருட்காட்சி சாலை திறந்து அடுத்த 6 நாட்களுக்கு பொதுமக்கள் இலவசமாக பார்வையிட முடியும் எனவும் அதன் நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.