இரு வாகனங்கள் மோதி விபத்து : 13 மாணவர்கள் வைத்தியசாலையில்!

உயர்நிலை பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Innisfil பகுதியில் 4 வது வீதி மற்றும் Sideroad 5 ஆகியவற்றில் இன்று (புதன்கிழமை) காலை சுமார் 7:45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் படுகாயமுற்ற மாணவன் ஒருவன் உலங்கு வானூர்தி உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன. மிகுதி மாணவர்களுக்கு சிறு காயமே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த விபத்து நேரத்தில் அந்தப் பகுதியில் மூடுபனி அதிகம் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.