கனடாவில் அமெரிக்க இராணுவத்தின் ஆயுதங்கள் மீட்பு?

மூடப்படாத பெட்டி ஒன்றிலிருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரண்டு இராணுவ தர தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் இரண்டு அடங்கிய மூடப்படாத பெட்டி ஒன்றிற்குள் வைக்கப்பட்டு மர்மமாக ரொறொன்ரோ பொம்பாடியர் திணைக்களத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

குறிப்பிட்ட ஆயுதங்கள் யு.எஸ்.அரசாங்கத்திற்கு சொந்தமானவை என படங்களில் தெரிவாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான பொதிக்குள் அமெரிக்க இராணுவத்தினரால் உபயோகிக்கப்பட்ட பெரெட்டா கைத்துப்பாக்கிகள் இரண்டு மற்றும் M4 assault rifles இரண்டு FedEx-மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஒன்று மட்டும் பொம்பாடியருக்கு வந்துள்ளது. மற்றையது எங்கு விநியோகிக்கப்பட்டது அல்லது பொதிக்குள் என்ன இருந்ததென தெளிவாக தெரியவில்லை.

நான்கு துப்பாக்கிகள் எவ்வாறு எல்லைக்கு ஊடாக அனுப்பபட்டது? அவற்றை அனுப்பியவர்கள் யார்? ஏன் பொம்பாடியருக்கு வந்தது? என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

விசாரனைக்காக ரொறொன்ரோ பொலிசாரிடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.