பீட்டர்பரோ நகரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவின் மத்திய ஒன்ராறியோவின் பீட்டர்பரோ நகரில் இடம்பெறும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.


இவ்வாண்டின் ஆரம்பம் முதல் ஜுன் மாத இறுதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2.7 வீதத்தினால் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 63இற்கும் அதிகமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த காலப்பகுதியில் எவ்வித கொலைக் குற்றங்களும் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இது அடுத்த காலாண்டுக்கான கணப்பெடுப்பில் உள்ளடக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.