கனடாவின் சோள ஏற்றுமதியில் சுபீட்சம்!

ஐரோப்பிய நாடுகளுக்கான கனடாவின் சோள ஏற்றுமதி சடுதியாக அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க சோளத்தினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையினை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியதிலிருந்து கனேடிய சோளத்திற்கான கேள்வி ஐரோப்பிய நாடுகள் மத்தியில்அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சோள ஏற்றுமதியின் மூலம் கனடா அதிக இலாபத்தினை பெற்றுவருவதாக அந்நாட்டு சோள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக சோள விற்பனையினால் கனடா பெற்றுக்கொள்ளும்  இலாபத்தைவிட கடந்த 9 மாதங்களுக்குள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான சோள ஏற்றுமதியானது  85 சதவீதத்தில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதாவது மொத்த ஏற்றுமதி சோளமானது, 1.2 மில்லியன் தொன் நிறையுடையதாகும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு கோதுமையினை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நான்காம் இடத்திலிருந்த கனடா, தற்போது அமெரிக்காவின் சுங்கவரிக் கொள்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக சோள ஏற்றுமதியில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.